பிரபலமான இடுகைகள்
-
ஊழல் / லஞ்சத்தால் இந்தியா மிக மோசமாக கெட்டு வருகிறது. அரசியல்வாதிகள் அதிகாரிகள் அனைவரும் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். மக்...
-
தாஜ்மஹால், வெள்ளைப் பளிங்குகளால் மூடி மறைக்கப்பட்ட கருப்புச்சரித்திரம். இன்னொரு முறை அதனைக் காதலின் சின்னம் என்று மட்டும் தயவுசெய்து கூறாதீர...
-
India is a democratic country in the world, a matter every Indian proud. Today's generation, saying that whenever the likelihood of Inde...
-
உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று என பெருமைப்பட்டுக்கொள்ள காரணமான தமிழ் மொழியின் இன்றைய நிலையை பார்த்தால் மிகவும் சோகம்தான். தமிழின் சிறப்பு ...
-
பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகள் என்றறியப்பட்ட ஒரு சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொண்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. அ...
-
காக்கி கலர் கால் சட்டையும் கட்டம் போட்ட லுங்கியும் ,, அந்த பொட்டல் புழுதியில் என்னோடு சேர்ந்து அழுக்காகும் ...... நான் கபடி விளையாடும் போது....
-
`ராமன் காடு செல்ல வேண்டும்' என்று கைகேயி கேட்டுப் பெற்ற வரத்தால், ராமன் எள்ளளவும் சினம் கொள்ளவில்லை ஆனால், அவன் உடம்புக்கு வெளியே நிற்க...
-
வாழ்த்துவதும் தான் வாழ" என்றொரு வாக்கு உண்டு. இறைவனையும் சரி, இன்ன பிறரையும் சரி, நாம் வரிந்து கொண்டு வாழ்த்துவது நாம் நன்றாக வாழ வேண்ட...
-
காதலர்தின வாழ்த்து கவிதை வாள்த்துமடல்களில்லை, வந்து குவியும் பரிசுகளில்லை, நான் அங்கும் ,நீ இங்கும் இல்லை , எல்லா விடுமுறை நாட்களின் மதியப்...
-
ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில் முன்னுக்கு நிற்ப்பது மு.கா என்று எண்ணியிருக்க என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா! ...
வியாழன், 8 மார்ச், 2012
கூடங்குளம்
கூடங்குளம் அணுஉலை வேண்டுமா... வேண்டாமா... என்பது நம்மில் பலரின் கேள்வி? ஒரு தரப்பினர் வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் வேண்டாம் என்றும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். 1988 ஆம் ஆண்டு அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், ரஷ்ய நாட்டுப் பிரதமர் மிக்கைல் கொர்பசோவும் கையெழுத்திட்டனர். அன்றைய நாள் முதலே அதற்கு எதிராக போராட்டங்கள் நடக்க தொடங்கின. 2008 ஆம் ஆண்டில் கூடுதலாக மேலும் ஆறு அணுமின் உலைகளை இங்கு உருவாக்க இந்திய அணுமின் கழகத்துடன் ரஷ்யா உடன்பாட்டை செய்து கொண்டது. இதன் மூலம் 1170 மெகா வாட் அணுமின் திறன் கொண்ட நான்காம் தலைமுறை WER1200 வகை அணுமின் உலைகளை வழங்கும். ஆரம்பத்தில் இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றபோதும், ஒருவேளை அணுஉலை வெடித்தால் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு நிகழ்த்திய பாதுகாப்பு ஒத்திகை அப்பகுதி மக்களிடையே பீதி எழ ஒரு காரணமாக அமைந்தது எனலாம். மக்களின் அச்சத்தை போக்க அமைக்கப்பட்ட மத்திய, மாநிலக்குழுக்கள் கூடங்குளத்தை மாறிமாறிவட்டமிட்டு சென்றாலும், போரட்டக்குழுக்களின் கேள்விகளுக்கு அவர்கள் செவிமடுக்கவில்லை என்பது சற்று வேதனைதான்! கூடங்குளத்தை ஆய்வுசெய்த அப்துல்கலமும் அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான், சுனாமி ஏற்பட்டாலும் எந்தவித பதிப்பும் இல்லை என்றார். இருப்பினும்அணுக்கழிவுகளை என்ன செய்வது என்ற கேள்விக்கு, கடலில் போடலாம் அல்லது நிலத்தில் புதைக்கலாம் என்கிறார். இந்த பூமி நமக்கு மட்டும் சொந்தமில்லை, நம் வருங்கால சன்னதிகளும் வாழவேண்டிய பூமி, அணுக்கழிவுகள் புதைக்கபட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், மேலும் அக்கழிவுகளை இருபத்துநான்கு ஆண்டுகள் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கப்பட வேண்டும் இவை சாத்தியமா? கடலில் போடலாம் என்று மற்றுமொரு வழியை கூறுகிறார்கள். கதிரியக்கம் கடலில் கலப்பதால் கடலின் வாழ்வாதாரம் பதிக்கப்படும் அல்லவா? மின்சாரபற்றக்குறையால் தமிழகம் தவிக்கும் வேளையில் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கினால் ஐம்பது சதவீதம் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படும் என பிரதமர் கூறியிருப்பது யாரை திருப்திபடுத்த...? ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே வெப்பம் நிலவும் அமெரிக்க, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளே சூரிய மின்சாரம் தயாரிக்கும் போது, ஆண்டு முழுவதும்,வெப்பம் நிலவும் நம் நாட்டில் சூரிய மின்சாரம் தயாரிப்பது சாத்தியம் தானே? குறைந்த செலவில் அதிக மின்னுற்பத்தி செய்ய வழிகள் இருந்தும் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவான் ஏன்? அணுஉலை பாதுகாப்பானது, நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை, கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் தொலைவில் உள்ளது, எந்த விதமான கதிர்வீச்சு ஆபத்தில்லை என் மத்திய, மாநில அரசுகள் அறிக்கை விடுகின்றனர். விபத்தே நடக்காது என்றால் அணு விபத்து இழப்பீடு சட்டத்தை ஏற்படுத்தியது ஏன்? அணு பாதுகாப்பு ஒத்திகை நடத்தியது ஏன்? அணுஉலையை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிக்க தடை விதிப்பது ஏன்? ஜேர்மன், ஜப்பான் போன்ற உலக நாடுகளே அணு உலைகளை மூடிவரும் திறந்தேயாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பது முறையா? பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கைக்காக ஓடியோடி பொருள் ஈட்டும் நாம், நாளை அவர்கள் நலமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வழிவகுக்க வேண்டாமா? நாளைய தலைமுறை கவலையின்றி வாழ கூடங்குளம் அணுஉலை திட்டத்தை இன்றே போராடி எதிர்ப்போம் ........ ஒற்றுமைவோடு போராடுவோம்.....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக