உடல் ரீதியான, பாலுணர்வு ரீதியான துன்புறுத்தல்கள், வன்முறை, பொருளாதார ரீதியாக பாதுகாப்பற்ற நிலை, குறைந்த அந்தஸ்தில் இருப்பதை எண்ணி வருந்துதல், மற்றவர்களைப் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டுமே என்ற தொடர் பொறுப்பு ஆகியவற்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
சோகமான எண்ணங்கள், தினமும் ஒரு முறை யாவது, அனைவருக்கும் எழுந்து, அடங்குவது இயற்கையே. ஆனால், ஒரு சோக நினைப்பு, தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு மேல் ஒருவர் மனதை ஆக்கிரமிக்கும்போதோ, அன்றாட வேலைகளில் தடையை ஏற்படுத்தும்போதோ, அந்த நிலை தான், "மன அழுத்தம்' என்றழைக்கப்படுகிறது. பிரியமான நடவடிக்கைகளில் நாட்டம் இல்லாமல் இருப்பது, சோர்வு, சுறுசுறுப்பின்மை, தூக்கமின்மை, கவனத் தடுமாற்றம், முடிவு எடுப்பதில் குழப்பம், பசியின்மை அல்லது அளவுக்கு அதிகமாக உண்பது. எந்த காரணமும் இன்றி, உடலில் எங்காவது வலி தோன்றுவது, எதிர்மறையான நிகழ்வுகளைத் தான் இனி சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம் ஆகியவை, மன அழுத்தத்திற்கான அறிகுறிகள். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றும்; அதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று தோன்றும். பெண்களிடையே மன அழுத்தம் சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.
மன ஓட்டங்களை கட்டுப்படுத்த திணறும்போது...
* நம்பகமான, அக்கறை கொண்ட நண்பர் களிடம், மனக் குறைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். * உடல் ரீதியான, பாலுணர்வு ரீதியான துன்புறுத்தல்கள், பொருளாதார ரீதியாக பாதுகாப்பற்ற நிலை, குறைந்த அந்தஸ்தில் இருப்பதை எண்ணி வருந்துதல், மற்றவர்களைப் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டுமே என்ற தொடர் பொறுப்பு ஆகியவை இதற்குக் காரணங்களாக அமைகின்றன. * உங்கள் மனதை சாந்தப்படுத்தும் இசை, தோட்டப் பராமரிப்பு, நல்ல புத்தகங்கள் படிப்பது, மனதுக்குப் பிடித்த உணவு உண்பது. * உங்கள் மீதான நம்பிக்கையை இழக்காமல் இருப்பது. * யோகா, தியானம் இவற்றை நாள் தவறாமல் செய்து வருவது. மேற்சொன்ன நடவடிக்கைகள், உங்கள் மனதை இதப்படுத்தி, மன அழுத்தத்திலிருந்து வெளி வர உதவும்.
மாத்திரையை தவிருங்கள்!
உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிந்தால், அதைத் தீர்க்க, நீங்கள் முழு முயற்சியில் இறங்க வேண்டும். மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறும்போது, முதல் கட்டமாக அவர்கள் பிரச்னையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முற்படுவர். இது நல்லது தான் என்றாலும், முன் பின் தெரியாத ஒருவரிடம், உங்கள் மனக் குறையைச் சொல்ல நீங்கள் தயங்கலாம். எனவே, மிக மிக நம்பிக்கையான நண்பர் ஒருவரிடம், உங்கள் பிரச்னையை எடுத்துச் சொல்லுங்கள்; மனதில் உள்ள அனைத்தையும், கொட்டி விடுங்கள். உங்கள் மீது அன்பு வைத்திருப்பவர், நிச்சயம் இதற்கான தீர்வு சொல்வார். "மன அழுத்தம் தீர்க்க, மாத்திரை சாப்பிடுகிறேன்' எனக் கிளம்புவதை விட, தற்காலிக உபாயங்களை நாடுவதை விட, மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்ப்பது நல்லது. |
பிரபலமான இடுகைகள்
-
ஊழல் / லஞ்சத்தால் இந்தியா மிக மோசமாக கெட்டு வருகிறது. அரசியல்வாதிகள் அதிகாரிகள் அனைவரும் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். மக்...
-
தாஜ்மஹால், வெள்ளைப் பளிங்குகளால் மூடி மறைக்கப்பட்ட கருப்புச்சரித்திரம். இன்னொரு முறை அதனைக் காதலின் சின்னம் என்று மட்டும் தயவுசெய்து கூறாதீர...
-
India is a democratic country in the world, a matter every Indian proud. Today's generation, saying that whenever the likelihood of Inde...
-
உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று என பெருமைப்பட்டுக்கொள்ள காரணமான தமிழ் மொழியின் இன்றைய நிலையை பார்த்தால் மிகவும் சோகம்தான். தமிழின் சிறப்பு ...
-
பரமஹம்ச நித்தியானந்த சுவாமிகள் என்றறியப்பட்ட ஒரு சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொண்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. அ...
-
காக்கி கலர் கால் சட்டையும் கட்டம் போட்ட லுங்கியும் ,, அந்த பொட்டல் புழுதியில் என்னோடு சேர்ந்து அழுக்காகும் ...... நான் கபடி விளையாடும் போது....
-
`ராமன் காடு செல்ல வேண்டும்' என்று கைகேயி கேட்டுப் பெற்ற வரத்தால், ராமன் எள்ளளவும் சினம் கொள்ளவில்லை ஆனால், அவன் உடம்புக்கு வெளியே நிற்க...
-
வாழ்த்துவதும் தான் வாழ" என்றொரு வாக்கு உண்டு. இறைவனையும் சரி, இன்ன பிறரையும் சரி, நாம் வரிந்து கொண்டு வாழ்த்துவது நாம் நன்றாக வாழ வேண்ட...
-
காதலர்தின வாழ்த்து கவிதை வாள்த்துமடல்களில்லை, வந்து குவியும் பரிசுகளில்லை, நான் அங்கும் ,நீ இங்கும் இல்லை , எல்லா விடுமுறை நாட்களின் மதியப்...
-
ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில் முன்னுக்கு நிற்ப்பது மு.கா என்று எண்ணியிருக்க என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா! ...
செவ்வாய், 24 ஏப்ரல், 2012
உங்கள் மீதான நம்பிக்கையை இழக்காதீர்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக