பிரபலமான இடுகைகள்

புதன், 25 மே, 2011

வேண்டும்வேண்டும்

நாமிங்கு நலம்பெற வாழ்ந்திடல் வேண்டும்
நன்மைகள் பற்பல செய்திடல் வேண்டும்
கற்பவை கசடற கற்றிடல் வேண்டும்
ஈன்றவர் சொற்படி நடந்திடல் வேண்டும்
அனைவருக்கும் நன்மைகள் செய்திடல் வேண்டும்
இருப்பதை இல்லார்க்கு பகிர்ந்திடல் வேண்டும்
அன்புடன் பண்புடன் பழகிடல் வேண்டும்
உலகத்தை சுற்றி பார்த்திடல் வேண்டும்
முன்னேற்றம் எதுவென அறிந்திடல் வேண்டும்
அறிந்ததை அனைவருக்கும் உணர்த்திடல் வேண்டும்
சுற்றமும் சூழமும் சேர்ந்திடல் வேண்டும்
சேர்ந்தவர் அனைவரும் மகிழ்ந்திடல் வேண்டும்
அயராது உழைத்து வாழ்த்திடல் வேண்டும்
நல்லவர் போற்ற நடந்திடல் வேண்டும்
இறைவனை நம்பி வணங்குதல் வேண்டும்
தோல்வியை கண்டு தளராமை வேண்டும்
எல்லாரும் எல்லாமும் பெற்றிடல் வேண்டும்
இல்லாமை இல்லாத நன்நிலை வேண்டும்
நீதியும் நேர்மையும் நிலைத்திடல் வேண்டும்
பஞ்சமும் ஏழ்மையும் ஓழிந்திடல் வேண்டும்
ஆசைகள் அளவுடன் இருந்திடல் வேண்டும்
பேராசை எல்லாம் அழிந்திடல் வேண்டும்
துன்பங்கள் நீங்கி இன்பங்கள் வேண்டும்
தாய்மொழி பேசி மகிழ்ந்திடல் வேண்டும்
பற்பல மொழிகளும் கற்றிடல் வேண்டும்
கணணிக் கல்வி அறிந்திடல் வேண்டும்
அகில்த்து புதினங்கள் பார்த்திடல் வேண்டும்
நாட்டினை காக்க உதவிடல் வேண்டும்
வேண்டும் வேண்டும் எல்லாம் வேண்டும்
நல்லவை எல்லாம் எமக்கிங்கு வேண்டும்
வேண்டும் வேண்டும் இவையெல்லாம் வேண்டும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக