பிரபலமான இடுகைகள்

புதன், 4 ஜனவரி, 2012

தாஜ்மஹால்...



தாஜ்மஹால், வெள்ளைப் பளிங்குகளால் மூடி மறைக்கப்பட்ட கருப்புச்சரித்திரம். இன்னொரு முறை அதனைக் காதலின் சின்னம் என்று மட்டும் தயவுசெய்து கூறாதீர்கள். கணக்கற்றுப்போன மனைவிகளின் மத்தியில் காலாவதியாகிப் போன அன்பைப் பெறுவதற்கான அரசாங்க உத்திரவே தாஜ்மஹால். எத்தனையோ மனிதர்களின் எலும்புகளை நொறுக்கி அஸ்திவாரமிட்டு இரத்தக்கறை படிய கட்டப்பட்ட சலவைக்கற்களின் மீது மாசு படிகிறதே என்று சண்டியர்த்தனம் செய்கிறீர்களே, உயிரின் கதறல்கள் உங்களுக்குத் தெரியவில்லையா?,
"ஒரு தலைமுறையின் உழைப்பிற்கு யமுனை நதிக்கரையில் பிண்டம் வைத்த செயலையா நீங்கள் உலக அதிசயம்" என்று பிதற்றுகிறீர்கள். இனிமேலாவது, சரித்திரம் சொல்லித்தருகிறேன் என்ற பெயரில் எங்கள் தளிர்களின் மனதில் சாக்கடையைக் கலவாதிருங்கள்.
ஷாஜகானின் "சலவைக்கல் கனவு" சமாதி கட்டியது - அவன் ராஜ்யத்தில் வாழ்ந்த அத்தனை காதல்களுக்கும்.
ஆம், தாஜ்மஹால் காதலுக்குக் கட்டப்பட்ட கல்லறை. காதல், கல்லறைகளின் மீது தூவப்படும காய்ந்து போன மலரல்ல, அது பறிக்கப்படாத ரோஜாக்களில் முகிழ்த்துக் கொண்டே இருக்கிறது.
தாஜ்மஹால், இன்னொரு முறை அதனைக் காதலின் சின்னம் என்று மட்டும் தயவுசெய்து கூறாதீர்கள். அது வெள்ளைப்பளிங்குகளால் காதலுக்கு வைக்கப்பட்ட "கருப்பு" முற்றுப்புள்ளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக