பிரபலமான இடுகைகள்

திங்கள், 3 அக்டோபர், 2011

“ காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம்”

ஊழலை ஒழிக்க பயன்படும் ஜன்லோக்பால் குறித்து விழிப்புணவர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்விருப்பதாக காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார். இன்று இவர் நிருபர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் ஜன்லோக்பால் நிறைவேறும்வரை எனது போராட்டம் தொடரும் . மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவ எனது முக்கிய நோக்ககம். வரும் குளிர்கால பார்லி., கூட்டத்தொடரில் ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் எனது உண்ணாவிரத போராட்டம் மீண்டும் தொடரும்.
ஜன்லோக்பால் மசோதாவுக்கு பா..,ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளது. நாட்டில் அனைத்து தரப்பிலும் ஆதரவு கிடைக்கிறது காங்கிரசை தவிர. இதனால் வரும் காலத்தில் மசோதா நிறைவேற்ற தவறும்பட்சத்தில் தேர்தல் நடவக்கவுள்ள மாநிலங்களில் காங்.,பிரதிநிதிகளை மக்கள் தேர்வு செய்யக்கூடாது என கேட்டுக்கொள்வேன். இந்த நாட்டுக்காக யார் உழைக்க நினைக்கின்றனரோ அவர்களுக்கு ஓட்டளியுங்கள். நான் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவானவன் இல்லை.அனைத்து மாநிலங்களிலும் லோக்அயுக்தா நிறைவேற்றபட்ட வேண்டும்.
தேர்தல் நடக்கவிருக்கும் உத்திரபிரதேசத்தில் பலக்கட்ட பிரசார பேரணி நடத்தவுள்ளேன். அனைத்து அரசியல் கட்சியினருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். உ .பி.,யில் தேர்தலுக்கு முன்னதாக 3நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். நாடு முழுவதும் பல மாநிலங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருக்கின்றேன். இதற்கென தசரா திருவிழாவிற்கு பின்னர் சுற்றுப்பயணம் செய்யவிருக்கின்றேன். பிரதமர் நேர்மையான மனிதர் ஆனால் இவர் ரிமோட் கன்ட்ரோலுக்கு கட்டுப்பட்டவராக இருக்கிறார். இவ்வாறு ஹசாரே தெரிவித்தார்
நன்றி தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக